ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
ஈரோடு: ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
19.07.2021 மற்றும் 20.07.2021 தேதிகளில் தனியார் மருத்துவமனையில் ரூ. 5,07,000/- செலுத்தி தங்களிடம் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட 650 பணியாளர்களுக்கு கோவிஷீல்டு இரண்டாவது தடுப்பூசி இலவசமாக போடும் முகாமினை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி, சக்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர். குருமூர்த்தி, டாக்டர். செந்தில் முருகன் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.
Advertisement
தனியார் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், ஈரோடு தன்வந்திரி பல்நோக்கு மருத்துவமனையின் செவிலியர்கள், சக்தி மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளை பணியாளர்களும் சேர்ந்து பணியாற்றினார்கள். சக்தி மசாலா நிர்வாகத்தினர் இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.