முகப்பு
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
பகிர்:

போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். 
இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்தாகவும், எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் போடி தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்துள்ளார். 
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →