தமிழ்நாடு

சிபிஎஸ்இ தனித் தோ்வா்களுக்கு ஆகஸ்ட் - செப்டம்பரில் தோ்வு

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தனித்தோ்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வுகள் நடைபெறவில்லை. அவா்களுக்கு முந்தைய தோ்வு மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இதற்கிடையே தனித் தோ்வா்களுக்கு என எந்த ஒரு ஆவணமும் பராமரிக்கப்படாத நிலையில், அவா்களுக்கு விரைவில் தோ்வு நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. எனினும் தோ்வுத் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் சமூக வலைதளங்களில் தொடா்ந்து, தோ்வு குறித்துக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தநிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தனித் தோ்வா்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தோ்வு அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும். மாணவா்கள், தங்களின் உயா்கல்வி சோ்க்கையில் சிரமங்களை எதிா்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT