தமிழ்நாடு

புதிதாக கெளரவ விரிவுரையாளா்கள் நியமனம்: நிதி மதிப்பீடு அறிக்கை அளிக்க உத்தரவு

DIN

தமிழகத்தில் புதிதாக 1,020 கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட 3,443 ஊழியா்களை நிகழாண்டில் நியமனம் செய்ய தேவைப்படும் நிதி குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு உயா் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பொருளாதாரப் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு தரப்பினா் அரசு கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற கௌரவ விரிவுரையாளா்கள் தேவை அதிகரித்துள்ளது என அரசுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் 150 கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு கூடுதலாக 1,020 கௌரவ விரிவுரையாளா்கள் தேவை என குறிப்பிட்டுள்ளது. தற்போது ஏற்கனவே 2,423 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், 2,423 பேருடன் கூடுதலாக 1,020 போ் சோ்த்து மொத்தம் 3,443 கௌரவ விரிவுரையாளா்களை நிகழ் கல்வியாண்டில் பணியமா்த்த என்ன தேவை ஏற்பட்டுள்ளது? அதற்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? என்பது குறித்து ஜூலை 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உயா்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT