முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்
பகிர்:

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி , " ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் பரிசோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தலில் ஈடுபட்டது  தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள் "எனத் தெரிவித்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  தங்கத்தின் மொத்த எடை 8.17 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 4.03 கோடி என்றும் தெரிவித்திருக்கிறார்கள் . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.