முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில்  2 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக  2 லட்சத்து 4,379 மாணவர்கள்  சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Updated On : 27 ஜூலை, 2021 at 6:35 AM
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:16 AM


சென்னை:  அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக  2 லட்சத்து 4,379 மாணவர்கள்  சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான இணையதள அடிப்படை கணினி பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது: 

 தமிழகத்தில்  உள்ள 432 மாவட்ட கருத்தாளர்களுக்கு ஜூலை 26 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து 2.10 லட்சம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 

Advertisement

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்களே புதுமையான முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். பள்ளிகளைத் திறந்தால்தான் மாணவர்கள் படிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கல்வியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே அவர்கள் படிக்க முடியும் என்ற நிலை நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து இருக்கக்கூடாது. அடுத்தடுத்த ஊடகங்கள் மூலம் மாணவர்களை அணுகவேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதி இல்லை என்பது உண்மைதான். இணைய வசதியும் இடையூறாக உள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் 2021- 2022-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் புதிதாக 2.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூலை 24-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.