கூத்தாநல்லூர் : அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் 
தமிழ்நாடு

கூத்தாநல்லூர் : அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலம், வடபாதிமங்கலம் பிரதான சாலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக, வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. தொடர்ந்து, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். நோயாளிகளையும், பிரசவ தாய்மார்களையும் மன்னார்குடி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூருக்கு அனுப்பி அலைக்கழிக்காமல் இருக்க மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும்.நகரப் பகுதியில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலையை, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் அமல்படுத்திட வேண்டும். 

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பாரபட்சம் பார்க்காமல் பயனாளிகள் அனைவருக்கும் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கவனிக்கப்படாமல் இருக்கும் தார் சாலைகளையும், சிமெண்ட் சாலைகளையும் உடனே நகராட்சி நிர்வாகம் கவனித்து செப்பணிட வேண்டும். கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உடனே கருவூலம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.சிவதாஸ் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன்,விவசாய சங்க நகரச் செயலாளர் கே. நாகராஜன், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் ஏ.பிச்சைமுத்து, மாதர் சங்க நகரச் செயலாளர் ஆர்.மகேஸ்வரி மற்றும்

விவசாயிகள் உள்ளிட்ட பலர் முழக்கங்கள் இட்டனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை, வட்டாட்சியர் கவிதாவிடம் வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் மாநில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

முதல்வா் மு.க. ஸ்டாலின் அக். 24, 25-இல் தென்காசி வருகை: மாவட்ட பொறுப்பாளா் தகவல்

சோ்ந்தமரத்தில் மயானக்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கடையநல்லூரில் தெரு நாய் கடித்து பலா் காயம்

SCROLL FOR NEXT