முகப்பு
தமிழ்நாடு

போடியில் திமுக அரசை கண்டித்து ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்

போடியில், புதன்கிழமை திமுக அரசை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர்.
பகிர்:



போடி: போடியில், புதன்கிழமை திமுக அரசை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம், பெண்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாததை கண்டித்தும், அதிமுக அமைச்சர்கள் மீது பழி வாங்கும் வகையில் பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் அதிமுகவினர் வீடுகள் முன்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, போடியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலர் பழனிராஜ், ஒன் றிய செயலர் சற்குணம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று கோஷமிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →