முகப்பு
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.
தமிழ்நாடு

திருப்பூரில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

தமிழ்நாடு

திருப்பூரில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

திமுகவினர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:

திமுகவினர் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டனர். அதேபோல, திருப்பூர் வடக்குத் தொகுதி சார்பில் அங்கேரிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமை வகித்தார். இதில், ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் பாலசுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஐஸ்வர்ய மஹராஜ், முன்னாள் கவுன்சிலர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →