முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,508 ஆனது

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,508 ஆக உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,508 ஆனது
பகிர்:


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,508 ஆக உள்ளது.

சென்னையில் ஜூலை 30ஆம் தேதி காலை நிலவரப்படி, கரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை சென்னையில் ஒட்டுமொத்தமாக 5,37,732 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. இவர்களில் இதுவரை 5,27,908 பேர் குணமடைந்துள்ளனர். 1,508 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரேனா பாதித்தவர்களில் இதுவரை 8,316 பேர் பலியாகிவிட்டனர்.

அதிகபட்சமாக, அடையாறிலும், அண்ணாநகரிலும் தலா 160 கரோனா நோயாளிகள் உள்ளனர். அதுபோல, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனாவுக்கு பலியானோர் தலா 900-ஐ தாண்டியுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →