தம்மம்பட்டியில் சேவா பாரதி அறக்கட்டளை சார்பில் கரோனா தடுப்பு பணி!
தம்மம்பட்டியில், ஆத்தூர் சேவா பாரதி, பாரதி அறக்கட்டளை சார்பாக, கரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் துவக்கப்பட்டது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், ஆத்தூர் சேவா பாரதி, பாரதி அறக்கட்டளை சார்பாக, கரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் துவக்கப்பட்டது.
தம்மம்பட்டி பஸ்நிலையம் அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் அசோக் குமார் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் பாலாஜி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையின் படி, புதன்கிழமை முதல் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்குதல், மாஸ்க், கபசுர குடிநீர், ஆக்சிஜன் அளவு பார்த்து கூறுதல் என, பொதுமக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த சேவை மையத்தில், தினமும் வைக்கப்படும் அரிசி, காய்கறிகளை, யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என, தம்மம்பட்டி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வேவ்ஸ் ராஜா தெரிவித்தார்.