தமிழ்நாடு

செஞ்சி அருகே நள்ளிரவில் கடத்திய 24 டன் ரேஷன் அரிசி  பறிமுதல்: இருவர் கைது

DIN


செஞ்சி: கர்நாடாகம் மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தயிருந்த 24 டன் ரேஷன் அரிசியை வளத்தி போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்  மாவட்டம்,  மேல்மலையனூர் தாலுக்காவிலுள்ள  மாவட்ட எல்லையான  ஞானோதயம் சோதனை சாவடியில் வளத்தி காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையின் போது நள்ளிரவில் சட்டவிரோதமாக செஞ்சியிலிருந்து பெங்களுருக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தயிருந்த 24 டன் எடைகொண்ட 4 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீஸார், இதுதொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் முரளி மற்றும் கிளினர் மணிகண்டனை கைது செய்தனர். 

வளத்தி காவல் நிலைய  சிறப்பு உதவி ஆய்வாளர் தேவேந்திரன்,  காவலர்கள் கார்த்திக், யுவராஜ் மணிகண்டன் ஆகியோர் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT