முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா; 443 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21,410 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,663 பேருக்கும், சென்னையில் 1,789 பேருக்கும், ஈரோட்டில் 1,569 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,16,812ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 443 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 26,571-ஆக உயர்ந்துள்ளது இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 32,472 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 32,778-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 1,75,365 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 57,463 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று வாரங்களில் இல்லாத வகையில் குறைந்த எண்ணிக்கையாகும். அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

அதேவேளையில் கரோனா தொற்றுக்குள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தே வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.