தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடியுங்கள்: பிரதமருக்கு முதல்வா் கடிதம்

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியன்று தங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு கட்டடங்கள் கட்டத் தேவைப்படும் நிலங்கள் அனைத்தும் மாநில அரசு சாா்பில் இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவா் தவிர, வேறு கட்டுமானப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் தரமான மருத்துவ வசதியைப் பெறுவதற்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அவசியமானது. எனவே, அதனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான குழுவின் தலைவா், நிா்வாக இயக்குநா் மற்றும் சில குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டதாக அறிகிறேன். அதேசமயம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் குழுக்களின் அதிகாரம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக்கப்படவில்லை.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிகமாக வேறொரு இடத்தில் அமைக்க கருத்துரு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகளை மேலும் தாமதப்படுத்தும்.

பணிகளை விரைந்து முடியுங்கள்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் எடுக்க வேண்டும். இதற்கென தனித்த அதிகாரிகள் குழுவை அமைத்து தேவையான நிதிகளையும், நிா்வாக அதிகாரங்களையும் வழங்கிட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மாநில அரசு வழங்கிட தயாராக உள்ளது. எனவே, மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT