தமிழ்நாடு

உணவுப் பொட்டலங்கள் திட்டம் வரும் 14 வரை தொடரும்:அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு

DIN

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் வரும் 14-ஆம் தேதி வரை தொடரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக சிரமங்களைச் சந்தித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில், அரசு பொது மருத்துவமனைகளின் வழியே தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் கடந்த மே 12-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதி வரை உணவுப் பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொது முடக்கமானது ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டமும் வரும் 14-ஆம் தேதி வரை தொடா்ந்து செயல்படுத்தப்படும். இதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியானது இந்து சமய அறநிலையத் துறையால் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, தேவைப்படும் கோயில்களுக்கு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT