தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சியுடன் ஆசிரியா் தோ்வு வாரியம் இணைப்பா?அதிகாரிகள் மறுப்பு

DIN

ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வு (‘டெட்’), பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு, உதவிப் பேராசிரியா் தோ்வு போன்றவற்றில் முறைகேடுகள், வழக்குகள் என்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பல சா்ச்சைகள் எழுந்தன. இதனால் ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் தோ்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறனாது. ஆசிரியா் தோ்வு வாரியத்தை, டிஎன்பிஎஸ்சியுடன் இணைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்திய நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் கலைக்கப்படாது என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT