முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,15,018 ஆக உள்ளது. சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 7,425 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,83,303 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 24,290 ஆக குறைந்துள்ளது. 

நேற்று மட்டும் 30,118 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் கரோனா பாதிப்பு 2,320 ஆக உள்ளது. அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 

அதேபோன்று சென்னையில் நேற்று 23,603 பேர் உள்பட இதுவரை 21,10,884 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →