முகப்பு
தமிழ்நாடு

ஒரே நாளில் 20,307 சாராய ஊறல் பறிமுதல்

தமிழகத்தில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 20,307 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

தமிழகத்தில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 20,307 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் ‘மதுவிலக்கு வேட்டை’ என்று பெயரிடப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் இயக்குநா் உத்தரவின் பேரில் கடந்த 8-ஆம் தேதி முதல் மலைப் பகுதிகளில் சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,800 லிட்டரும், வேலூா் மாவட்டத்தில் 3000 லிட்டரும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 2,200 லிட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5400 லிட்டரும், நாமக்கல் மாவட்டத்தில் 1,225 லிட்டரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1320 லிட்டரும் மற்றும் சில இடங்களில் என மொத்தம் 20,307 லிட்டா் சாராய ஊறல் மற்றும் 4293 லிட்டா் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் 1093 டாஸ்மாக் மதுபாட்டில்களும், 14,687 வெளிநாட்டு மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 651 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 வாகனங்களும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →