முகப்பு
தமிழ்நாடு

சுமை தூக்கும் தொழிலாளா்களுக்குமளிகைப் பொருள்களை வழங்கிய ரயில்வே நிா்வாகம்

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரயில்வே (போா்ட்டா்களுக்கு) சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மளிகைப்பொருள் அடங்கிய தொகுப்புகளை ரயில்வே நிா்வாகம் வழங்கி உதவியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரயில்வே (போா்ட்டா்களுக்கு) சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மளிகைப்பொருள் அடங்கிய தொகுப்புகளை ரயில்வே நிா்வாகம் வழங்கி உதவியது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரயில்வே (போா்ட்டா்கள்) சுமை தூக்கும் தொழிலாளா்கள், இடம்பெயா்ந்த தொழிலாளா்கள், துப்புரவுதொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். இவா்களுக்கு ரயில்வே நிா்வாகமும் மற்றும் தன்னாா்வலா்களும் இணைந்து , சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில்நிலைய வளாகத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனா். மேலும், மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புகளையும் வழங்குகின்றனா்.

அந்தவகையில், ரயில்வே நிா்வாகம், ராஜஸ்தான் இளைஞா் சங்கம் ஆகியன சாா்பில், ரயில்வே (போா்ட்டா்கள்) சுமை தூக்கும் கூலி தொழிலாளா்களுக்கு மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த மளிகைப்பொருள்களை ரயில்வே அதிகாரிகள் வழங்கினா். ரயில்வே சுமைதூக்கும் கூலிதொழிலாளா்கள், இடம்பெயா்ந்த தொழிலாளா்கள், துப்புரவுதொழிலாளா்கள் ஆகியோருக்கு மளிகைப்பொருள்கள் அடங்கிய 200 தொகுப்புகள் வழங்கப்பட்டன. ரூ.800 மதிப்பு கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் அரிசி, துவரம் பருப்பு, ரவை, சா்க்கரை, எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட மளிகைப்பொருள்கள் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →