தமிழ்நாடு

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு: திருப்பூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருப்பூர்: தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.

இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கேசிஎம்பி சீனிவாசன், மாவட்டச் செயலாளர் கார்த்தி, ராயுபரம் மண்டல் தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் பூபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT