தமிழ்நாடு

தமிழகத்தில் தேநீர் கடைகளைத் திறக்க அனுமதி

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில், காலை 6 முதல் மாலை 5 வரை தேநீர் கடைகள் செயல்படும் என்றும் அதேநேரத்தில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில் தேநீர் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

SCROLL FOR NEXT