நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

DIN


தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்மேற்குப் பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT