முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ஹெச். கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்பு
பகிர்:

ஈரோடு:  ஈரோடு மாவட்ட ஆட்சியராக ஹெச். கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சி.கதிரவன், சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் தலைவராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 2016 இல் கோபிச்செட்டிபாளையத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை கோப்புகளில் கையெழுத்திட்டு ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →