முகப்பு
தமிழ்நாடு

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். 
பகிர்:

தில்லி தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். 

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி சென்றுள்ளார். இன்று காலை தில்லி சென்றுள்ள அவருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தில்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தில்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகம் குறித்து ஆய்வு செய்த அவர் பின்னர் தில்லி தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார். 

இன்று மாலை 5 மணியளவில் அவர் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்துக்குத் தேவையானவற்றை பிரதமரிடம் நேரடியாக முதல்வர் பேசவுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →