தமிழ்நாடு

தொலைதூரக் கல்வியில் சட்டப்படிப்பு: அண்ணாமலைப் பல்கலை.க்கு தடை நீட்டிப்பு

DIN

தொலைதூர கல்வி மூலம் சட்டப் படிப்புகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் சட்டப் படிப்புகளை நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்திய பாா்கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல் சட்டப் படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலம் நடத்த முடியாது. எனவே இந்த விளம்பரத்தை ரத்து செய்து, இந்த படிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு முன் இந்தப் படிப்பை முடித்து பட்டங்களைப் பெற்றவா்களிடம் இருந்து அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.  கடந்த 2008-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டக்கல்வி விதிகளின்படி தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவா்கள் வழக்குரைஞராகப் பதிவு செய்ய முடியாது.  இந்த நிலையில் வெளிவந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது’ எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்புகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய பாா்கவுன்சில் தரப்பில், ‘தொலைதூர கல்வி முறையில் சட்டப்படிப்புகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை’ என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்தியா முழுவதும் சுமாா் 1,600 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த பேராசிரியா்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனரா என கேள்வி எழுப்பினா். பின்னா், சட்டப்படிப்பின் தரத்தை உயா்த்த வேண்டும். அதற்கு இந்திய பாா் கவுன்சில் விழிப்புடன் செயல்பட்டு, தேவையான விதிகளைக் கொண்டு வரவேண்டும்.  இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க மேலும் கால அவகாசம் வழங்கி விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா். மேலும் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்புகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

SCROLL FOR NEXT