இன்று குடிமைப் பணித் தோ்வுக்கான இணைய வழிக் கருத்தரங்கு
குடிமை பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மாலை 5 மணியளவில் இணைய வழியிலான கருத்தரங்கை நடத்துகிறது
சென்னையில் இயங்கிவரும் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, குடிமை பணித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மாலை 5 மணியளவில் இணைய வழியிலான கருத்தரங்கை நடத்துகிறது. இதில், அகாதெமியின் ஆசிரியா் ஆதில் பைக், ‘ணமஅகஐபஐஉந பஏஅப உயஉதவ அநடஐதஅசப நஏஞமகஈ ஈஉயஉகஞட’ என்ற தலைப்பில் மாணவா்களிடம் கலந்துரையாட உள்ளாா்.
கலந்து கொள்ள விரும்புவோா் இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற கருத்தரங்கம், ஜூலை 21-ஆம் தேதி வரை வாரம் இருமுறை நடைபெறும்.
2020-21-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தோ்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் (ஆன்லைன், நேரடி) ஜூன் 28-ஆம் தேதி (ரெகுலா், வார இறுதி வகுப்புகள்) தொடங்கவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, அகாதெமியை நேரிலோ அல்லது 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோா அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.