நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வரைவு கொண்டுவரப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை நிதிநிலை அறிக்கை குறித்து அறிந்துகொள்ள பயன்படும் என்று கூறினார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும் என்றும், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.