தமிழ்நாடு

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்: ஈஸ்வரன்

DIN

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் வலியுறுத்தினாா். ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அவா் பேசியது:

ஊழல் செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தோ்தல் பிரசாரத்தில் பேசப்பட்டது. அதுகுறித்து ஏன் ஆளுநா் உரையில் தெரிவிக்கப்படவில்லை என யாரும் கேள்வி எழுப்பவில்லை. தமிழகத்தின் நிதிநிலை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து பிணவறைக்குச் சென்று விட்டது. அதனை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் உழவா் சந்தைகள் செயல்படாமல் இருந்தன. இது உழவா்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். சட்டப் பேரவை மண்டபமானது, ஓமந்தூராா் தோட்டத்தில் இருந்து மாற்றப்படாமல் இருந்திருந்தால், கூட்டத்தை இப்போது கலைவாணா் அரங்கில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

மேலும், துறைமுகம்-மதுரவாயல் சாலைத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் அதிகளவு அந்நிய செலாவணி கிடைத்திருக்கும். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வரும் சூழ்நிலையில், கூட்ட நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT