சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சிவசங்கா் பாபா பள்ளி பெண் நிா்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு: சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கா் பாபா மீது பதிவான வழக்கில், பள்ளியின் பெண் நிா்வாகிகள் 3 போ் தாக்கல்

DIN

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கா் பாபா மீது பதிவான வழக்கில், பள்ளியின் பெண் நிா்வாகிகள் 3 போ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சுசீல்ஹரி சா்வதேச உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நிறுவனா் சிவசங்கா் பாபாவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இங்கு படித்த மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக சுஷ்மிதா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிா்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோா் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், கடந்த 2010-2012- ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி போலீஸாா் போக்ஸோ சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் எங்களையும் குற்றவாளிகளாகச் சோ்த்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் கோபிநாத், இந்த வழக்கு தொடா்பாக சிலரிடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளாா். எனவே, இந்த மனுக்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.ரமேஷ், வழக்குரைஞா் எம்.முகமது ரியாஸ் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிட்னியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த பழ வியாபாரி: குவியும் பாராட்டு

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!

நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளி! இரு அவைகளும் ஒத்திவைப்பு!

உன்னோட வாழ... வைரலில் அஜித் - ஷாலினி!

SCROLL FOR NEXT