கணவர் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி நித்யா, மகள் மகதி, மகன் யாதவ் கிருஷ்ணன். 
தமிழ்நாடு

கரோனாவால் கணவர் சாவு: இரு குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை

கரோனா பாதிப்பால்  கணவர் இறந்ததால் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். 

DIN



ஈரோடு: கரோனா பாதிப்பால்  கணவர் இறந்ததால் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். 

ஈரோடு திண்டல், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (67). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு ஹரிஹரன் என்ற மகனும், நித்தியா ரம்யா என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஹரிஹரன் மஸ்கட்டில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகள் நித்யாவிற்கு சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு  முன்பு திருமணம் நடந்தது. பாஸ்கர் சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு  மகதி(11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன்(6) என்ற மகனும் உள்ளனர். மகதி சென்னை மாங்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு, யாதவ் கிருஷ்ணன் அதே பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த மாதம் 2 -ஆம் தேதி பாஸ்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ஆம் தேதி  இறந்தார். இதையடுத்து நித்யா தனது மகன், மகளுடன் ஈரோடு திண்டலில் உள்ள தந்தை வீட்டில் தங்கியிருந்தார். 

இந்நிலையில், கணவர் பிரிவைத் தாங்க முடியாத நித்யா, வியாழக்கிழமை மதியம் சாப்பாட்டில் விஷ மாத்திரையை கலந்து மகள் மகதிக்கும், மகன் யாதவ் கிருஷ்ணனுக்கும் கொடுத்து தானும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு உள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு  தூங்க சென்று விட்டனர். மாலை 6 மணி வரை கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அந்த அறையில் விஷம மாத்திரை  கிடந்தது. மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன்  ஆகிய 3  பேரும் வியாழக்கிழமை இரவு இறந்தனர்.        
     
இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT