முகப்பு
தமிழ்நாடு

இந்து முன்னணி சார்பில் கோயில்களைத் திறக்கக்கோரி அரசிராமணியில் ஆர்ப்பாட்டம் 

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோயில்களை தமிழக அரசு திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில்  சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
இந்து கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சங்ககிரி வட்டம், அரசிராமணி, பழக்காரன்காடு பகுதியில் உள்ள சோழீஸ்வரர் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.
பகிர்:

சங்ககிரி: தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோயில்களை தமிழக அரசு திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில்  சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோயில்களை பக்தர்கள் வழிபாட்டிற்காக தமிழக அரசு திறக்கக் கோரி சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலர் கோபிநாத் தலைமையில் சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பழக்காரன்காடு பகுதியில் உள்ள சோழீஸ்வரர் கோயில் முன்பு கற்பூரத்தை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்கள் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசிராமணி இந்து முன்னணி பேரவைத் தலைவர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பழனியப்பன், நிர்வாகிகள் திருநிறைச்செல்வி, பிரபாகரன், சசிகுமார், தனராஜ், முருகன், லோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →