தமிழ்நாடு

வாலாஜாபேட்டை: கோயில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் விளக்கு ஏற்றி போராட்டம்

DIN

இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக தமிழக அரசாங்கம் கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வலியுறுத்தி வாலாஜா நகர இந்து முன்னணி சார்பில் கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி. ராஜேஷ் தலைமையில் வாலாஜாபேட்டையில் உள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாலாஜாபேட்டை ஏகாம்பரநாதர் கோயில், அணைக்கட்டு ரோட்டில் உள்ள சுந்தர விநாயகர் கோயில், பச்சையம்மன் கோயில், காசி விசுவநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் முன்பு விளக்கேற்றும் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சசிகலா தங்கதுரை மற்றும் இந்து முன்னணி நகர அமைப்பாளர் நிர்மலா தேவி ஆகியோர் கற்பூரம் ஏற்றி போராட்டத்தைத் துவக்கி வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலாஜா நகர இந்து முன்னணி தலைவர் பிரேம் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் உமாபதி, பொருளாளர் பிரபு துணைத் தலைவர்கள் பாலா, ஸ்ரீதர் செயலாளர்கள் முத்து, சதீஷ், நாகராஜ், தீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT