முகப்பு
தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பேரறிவாளன்
பகிர்:

திருப்பத்தூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோலில் வந்துள்ளார். அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டுச் செல்கிறார்.

இந்நிலையில்,பேரறிவாளன் வெள்ளிக்கிழமை அவரது வீட்டிலிருந்து பணியிடை பயிற்சி டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் தலைமையில், ஆயுதப்படை ஆய்வாளர் பாபு உள்ளிட்ட 6 போலீஸாரின் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதையடுத்து அவர் மீணடும்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →