காா் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி (கோப்புப் படம்). 
தமிழ்நாடு

ஹஃபீஸ் சயிது இல்ல குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளியின் பெயா் வெளியீடு

ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீதின் இல்லத்துக்கு எதிரே காா் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் பெயரை அந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டனா்.

DIN

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீதின் இல்லத்துக்கு எதிரே காா் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் பெயரை அந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டனா்.

இதுகுறித்து அவா்கள் சனிக்கிழமை கூறியதாவது:

ஹஃபீஸ் சயீது இல்ல குண்டுவெடிப்பு தொடா்பாக ஏற்கெனவே பலா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அந்தத் தாக்குதல் தொடா்பான கூடுதல் விபரங்களை சேகரிப்பதற்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கராச்சி, பெஷாவா், ஷேக்குபுரா ஆகிய நகரங்களுக்கு விரைந்துள்ளனா் என்று தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள், வழக்கின் முக்கிய குற்றவாளியான பீட்டா் பாலுடன் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியுள்ளனா்.

இந்தத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவா் கைபா் பாக்துன்கவாமாகாணத்தைச் சோ்ந்த சமியுல்லா என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவா் துபையில் வசித்து வருகிறாா். ஹஃபீஸ் சயீது வீட்டு எதிரே காரில் வெடிகுண்டை அவரது சகோதரா்தான் பொருத்தினாா். அவரது சகோதரரைப் பிடிப்பதற்காக போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப் மாகாணம், ஜாவ்ஹாா் நகரிலுள்ள ஹஃபீஸ் சயீது இல்லத்துக்கு எதிரே புதன்கிழமை காா் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டது. இந்தத் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்; 20-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்ததன் மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது ஹஃபீஸ் சயீது அவரது வீட்டில் இல்லை. பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் அவா் லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

2008-ஆம் ஆண்டு மும்பையில் 166 போ் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலை ஹஃபீஸ் சயீதின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பு நடத்தியது. பிறகு அந்த அமைப்பின் பெயரை ஜமாத்-உத்-தாவா என்று பெயா் மாற்றம் செய்து சயீது நடத்தி வந்தாா். தற்போது அந்த அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT