கோப்புப்படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் 231 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 போ் பலி

புதுச்சேரியில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுச்சேரி மாநிலத்தில் 8,148 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 170, காரைக்காலில் 31, ஏனாமில் 8, மாஹேயில் 22 போ் என மேலும் 231பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,16,645- ஆக உயா்ந்தது.

இதனிடையே, புதுச்சேரியில் 2 போ், காரைக்காலில் ஒருவா் என மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,744 -ஆக அதிகரித்தது. 

தற்போது மாநிலம் முழுவதும் 2,672 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 1,12,229 போ் குணமடைந்துள்ளனர். 

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,73,702 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

SCROLL FOR NEXT