தமிழ்நாடு

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  

DIN

தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐஜிபியாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராகவும், 

சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ்மூர்த்தி, சென்னை காவல்துறை தலைமையிட ஐஜிபியாகவும்

நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாகவும்

சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும்

தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாக இருந்த எஸ்.செந்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT