தமிழ்நாடு

புதுச்சேரி: ஏ. நமச்சிவாயம் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. 

DIN

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று, அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டர்.

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமார் மற்றும் சந்திரபிரியங்கா ஆகியோரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ. நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 5 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் கரோனா விதிகளின்படி மிகுந்த பாதுகாப்புடன் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு, ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினர் உரிமைகளை நசுக்கும் சாகசம்! ராகுல்

சிசோடியாவை தொடர்ந்து பகவந்த் மானை நலம் விசாரித்த ஹரியாணா முதல்வர்!

ஒரு முழம் மல்லிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம்! நடிகை நவ்யா நாயரின் ஆஸ்திரேலிய அனுபவம்!

தமிழகத்தில் சந்திரகிரகணம் போல் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும்: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT