முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: பொதுப் போக்குவரத்து தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து துவங்கியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து துவங்கியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பெருந் தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்து வரும் சூழலில் ராணிப்பேட்டை உள்பட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, சோளிங்கர் ஆகிய இரண்டு அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து 62 நகரப் பேருந்துகளும் 31 புறநகர்ப் பேருந்துகளும் 50 சதவிகித பயணிகளுடன், நோய் தொற்றும் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பொது போக்குவரத்து இன்றி இன்று வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.