தமிழ்நாடு

தலைஞாயிறு பகுதியில் மாநில வேளாண் இயக்குநர் ஆய்வு

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகளை மாநில வேளாண் இயக்குநர் பி. சங்கரலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தலைஞாயிறு பகுதியில் குறுவை பருவத்தில் நேரடி நெல்விதைப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மாநில வேளாண் இயக்குநர் பி.சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

பனங்காடி, கொத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை நெல் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களுக்குச் சென்று பார்த்தார். குறுவை முனைப்பு இயக்கம் சார்ந்த திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது விவசாயிகளை சந்தித்த அவர், சாகுபடி விபரங்கள், சாகுடிக்கான தேவைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தலைஞாயிறு வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.கருப்பையா, வேளாண் உதவி விதை அலுவலர்கள் பி.ஆர்.ரவி, இரா.ஜீவானந்தம், வேளாண் அலுவலர் பிரதீப்குமார் ,வேளாண் உதவி அலுவலர்கள் கார்திகா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT