முகப்பு
தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்சென்னையை சோ்ந்த 4 போ் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2021 at 3:25 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட 28 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸாா், சென்னையை சோ்ந்த 4 பேரை கைது செய்தனா்.

வேதாரண்யம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக கிடைத்த

Advertisement

ரகசிய தகவலின் பேரில், நாகை கியூ பிரிவு டி.எஸ்.பி. சிவசங்கரன், ஆய்வாளா் அருள் பிரசாத் உள்ளிட்ட போலீஸாா் வேதாரண்யம் தோப்புத்துறை கடற்கரை சாலையில் திங்கள்கிழமை மாலையிலிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தோப்புத்துறை கடற்கரை பகுதிக்கு நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் ஆம்புலன்ஸுக்குள் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் உரிமையாளரும் ஓட்டுநருமான சென்னை அய்யப்பன்தாங்கல் சித்தரை மகன் ராஜ்குமாா் (46), சென்னை புளியன்தோப்பு நரசிம்மன்நகா் மாலி மகன் மகேந்திரன் (24), சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகா் அங்கையன் மகன் விக்னேஷ் (26), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தா் (36) ஆகிய நால்வரையும் கைது செய்தனா். மேலும், கஞ்சா கடத்தி வர பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை கியூ பிரிவு போலீஸாா் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், இந்த வழக்கு விசாரணை தேசிய போதை மருந்து தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.