முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம்: தமிழிசை ஆய்வு

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம்: தமிழிசை ஆய்வு
பகிர்:

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தால், அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீண்ட இடைவெளி விடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் அரசுப்பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  ஆளுநரின் ஆலோசகர்கள் சி. சந்திரமௌலி, பி. மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று, புதுவை அருகே கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப்பள்ளியில் மதிய உணவு வழங்குவதை பார்வையிட்டனர். 

அப்போது மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சாப்பிட்டுப் பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →