முகப்பு
தமிழ்நாடு

சமக தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
சமக தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு
பகிர்:


தூத்துக்குடி:  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுகோட்டை பகுதியில் அகில இந்திய  சமத்துவ மக்கள் கட்சியின் 6-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமாரும்,  துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியன்றி தேர்வு என்று விழா மேடையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் புதியதாக பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வேளச்சேரி சட்டப்பேரவை சமக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமக கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →