முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் இழுபறி: நிர்வாகிகளுடன் மதிமுக ஆலோசனை

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பகிர்:

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தாயகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில்,  மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏற்கெனவே 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இதனால் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது மதிமுக 10 தொகுதிகள் வரை கோரியிருந்த நிலையில், 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →