தமிழ்நாடு

திமுக-இந்திய கம்யூ. இடையே இன்று மாலை 3-ம் கட்டப் பேச்சு

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு கட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று மாலை 3-ம் கட்ட பேச்சு நடைபெறவுள்ளது.

முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.

இது தொடர்பாக இன்று மாலை ஆலோசிக்கப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்படும்  என்று தெரிகிறது.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT