முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரை காவல் நிலைய வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை  ஜாமினில் கையெழுத்து போட்டுவந்த இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
கொலை செய்யப்பட்ட அக்னிராஜ்.
பகிர்:


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை  ஜாமினில் கையெழுத்து போட்டு வந்தவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. 

மானாமதுரையில் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி  இரவு நீதிமன்றம் முன்பு முருகன் மகன் மைனர் மணி என்ற அருண்நாதன் (27),  காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் வினோத்கண்ணன் (30) ஆகிய இருவரையம் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. 

இதில், அருண்நாதன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். வினோத் கண்ணன் இன்று வரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மானாமதுரையைச் சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19) ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளிவந்தவர் தினசரி மானாமதுரை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். 

இன்று வெள்ளிக்கிழமை காலை கையெழுத்து போட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவரை காவல்நிலையம் அருகில் மூன்று பேர் கொண்ட கும்பல் மறித்துக் கீழே தள்ளி சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

கடந்த ஜனவரியில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

கொலை செய்யப்பட்டவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி ராஜராஜன், ஏடிஎஸ்பி முரளிதரன் (கடந்த ஜனவரி கொலை சம்பவத்தையும் இவர் விசாரித்தார்) நேரில் பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →