மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.  
தமிழ்நாடு

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை நதியோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை நதியோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

எல்லா மக்களும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஆனந்தமுடன் வாழ வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜை வழிபாட்டில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை நடத்தினர். 

ஆனந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையின் போது உற்சவர் ஆனந்தவல்லி அம்மன் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திருவிளக்கு பூஜையின் நிறைவாக மங்கள ஆரத்தி நடைபெற்று முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் பெண் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT