முகப்பு
தமிழ்நாடு

அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி

​தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
ஒவைசி (கோப்புப்படம்)
பகிர்:


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி பேரவைத் தேர்தலிலும் இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இருகட்சிகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப் மற்றும் தமிழக தலைவர் வக்கீல் அஹமது உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்திட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →