முகப்பு
தமிழ்நாடு

பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)
பகிர்:

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்றது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகம், மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி, மாநிலத் தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா்.

அதேபோன்று இதையடுத்து நடைபெற்ற பாமகவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாமக சாா்பில் அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி பங்கேற்றாா். அதிமுக பாஜக 20 இடங்களிலும் பாமக 23 இடங்களிலும் போட்டியிடுகின்றன இவ்விரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

இதுபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல், திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →