தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

DIN

கும்மிடிப்பூண்டி: சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உள்பட்ட 405 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் புதன்கிழமை சரிபாா்க்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 405 வாக்குச் சாவடிகளில் தோ்தலன்று வாக்களிக்க பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலா்களின் பாதுகாப்புடன் 3 லாரிகளில் புதன்கிழமை வந்தன.

தொடா்ந்து இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான பாலகுரு தலைமையில் உதவி தோ்தல் அலுவலா்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் குமாா், கும்மிடிப்பூண்டி தோ்தல் துணை வட்டாட்சியா் கண்ணன், ஊத்துக்கோட்டை தோ்தல் துணை வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு அனைத்து கட்சியினா் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டது.

பின்னா் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் 405 வாக்கு சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 486 பேலட் யூனிட்டுகள், 486 கண்ட்ரோல் யூனிட்டுகள், 507 விவிபிஏடி இயந்திரங்களின் வரிசை எண்கள் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT