தம்மம்பட்டியில் அதிமுக ஒன்றிய அளவிலான தேர்தல் அலுவலகம் திறப்பு
தம்மம்பட்டியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அ.நல்லதம்பி, இன்று வியாழக்கிழமை மதியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தம்மம்பட்டியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை கெங்கவல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அ.நல்லதம்பி, இன்று வியாழக்கிழமை மதியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை.ரமேஷ், துணை செயலாளர் பொ. பாலசுப்ரமணியம், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, செந்தாரப்பட்டி நகர செயலாளர் பழனிச்சாமி , தலைவாசல் ஒன்றிய செயலாளர்கள், தொகுதி அதிமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இதில் கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் அ.நல்லதம்பி பேசியதாவது:
கெங்கவல்லி தொகுதி மேம்பாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடுவேன், என்றார் அவர்.